Difference between revisions of "Spoken Tutorial Technology/Creation of spoken tutorial using recordMyDesktop/Tamil"

From Process | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- | 0:00 |வணக்கம் நண்பர்களே, இந்த '''“ஹவ் டு யூஸ் ரெகார்ட்மை டெ…')
 
(No difference)

Latest revision as of 17:58, 20 December 2012

Time Narration
0:00 வணக்கம் நண்பர்களே, இந்த “ஹவ் டு யூஸ் ரெகார்ட்மை டெஸ்க்டாப் ” ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
0:05 ரெகார்ட்மை டெஸ்க்டாப் என்பது உபுன்டு லீனக்ஸில் திரையை பதிவு செய்ய பயன்படும் திறந்த மூல மென்பொருள்.
0:13 திரைப்பதிவு மென்பொருள் பற்றி மேலும் அறிய இதே வலைத்தளத்தில் உள்ள ஹௌ டு யூஸ் கேம் ஸ்டூடியோ எனும் ஸ்போகன் டுடோரியலை பாருங்கள்.
0:21 நான் ஏற்கெனெவே ஜிடிகே- ரெகார்ட்மை டெஸ்க்டாப் பதிப்பு 0.3.8 ஐ ஸினாப்டிக் பாக்கேஜ் மானேஜர் மூலம் என் கணினியில் நிறுவிவிட்டேன்.
0:33 உபுண்டு லீனக்ஸ் இல் எப்படி நிரல்களை நிறுவுவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் இதே வலைத்தளத்தில் உள்ள ஸ்போகன் டுடோரியல் பக்கங்களை பாருங்கள்.
0:43 ரெகார்ட்மை டெஸ்க்டாப் ஐ வெற்றிகரமாக நிறுவியபின் திரையின் மேலே உள்ள மெய்ன் மெனுவுக்கு செல்லுங்கள்.
0:51 அப்ளிகேஷன்ஸ் , சவுன்ட் , விடியோவை சொடுக்கினால்...
0:55 கான்டெக்ஸ்ட் மெனுவில் ரெகார்ட்மை டெஸ்க்டாப் ஐ பார்க்கலாம். அதை சொடுக்குங்கள்.
01:02 இது அதன் அப்ளிகேஷன் சாளரத்தை திறக்கும்.
01:07 இந்த முதன்மை அப்ளிகேஷன் சாளரம் ரெகார்ட் செய்ய சில அடிப்படை பாராமீட்டர்களை வரையறுக்க உதவுகிறது. இதன் ட்ரே ஐகான் உங்கள் பதிவுகளின் இயக்க கன்ட்ரோல் ஐ கவனித்துக்கொள்ள பயன்படுகிறது.
01:19 உங்கள் ஸிஸ்டம் ட்ரே ஐகானில் ஒரு புது உள்ளீடு இருப்பதை கவனிக்கவும். இந்த சிவப்பு வட்டம் ரெகார்ட் பட்டன் நிலையை குறிக்கிறது.
01:27 இந்த ஸிஸ்டம் ட்ரே ஐகான் மூன்று நிலைகளில் இருக்கலாம்:
  • ரெகார்டிங்க்
  • ஸ்டாப்
  • பாஸ்
01:34 ரெகார்ட்மை டெஸ்க்டாப் துவங்கும்போது இந்த ஐகான் சிவப்பு வட்டமாக, அதாவது ரெகார்ட் சின்னமாக இருக்கும்.
01:41 பதிவை துவக்கிவிட்டால் இது ஒரு சதுரமாக அதாவது ஸ்டாப் சின்னமாக இருக்கும். .
01:46 இங்கே இரண்டு சதுரங்கள் இருப்பதை கவனியுங்கள்.
01:48 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் ரெகார்ட்மை டெஸ்க்டாப் ஐ பயன்படுத்துவதால் இப்படி நிகழ்கிறது.
01:51 பதிவை கொஞ்சம் நிறுத்த -பாஸ் செய்ய- இந்த சதுரத்தின் மீது வலது சொடுக்கு சொடுக்க வேண்டும். சின்னமும் இரட்டை கோடு கொண்ட பாஸ் நிலை - அதாவது செங்குத்தான இரட்டை மெல்லிய நீள்சதுரங்களாக காணலாம்
02:03 மீண்டும் பதிவை தொடர இந்த பாஸ் சின்னத்தின் மேலே சொடுக்க வேண்டும்.
02:07 பதிவை நிறுத்த சதுரத்தின் மீது சொடுக்க வேண்டும்.
02:12 பாராமீட்டர்களை அமைக்கு முன் ஒரு முக்கிய செய்தி சொல்லுகிறேன்.
02:18 சிவப்பு சிஸ்டம் ட்ரே சின்னத்தில் ரைட் க்ளிக் - சொடுக்குங்கள். இங்கே முக்கிய அப்ளிகேஷன் சாளரத்தை காட்டவோ அல்லது மறைக்கவோ தேர்வு இருக்கிறது.
02:26 ஒரு பதிவு அமர்வை ஆரம்பிக்கும் போது முன்னிருப்பாக இந்த சாளரம் தானே மறைத்துக்கொள்ளும்.
02:32 எப்போதும் காட்ட வேண்டுமானால் இந்த தேர்வை மாற்றி அமைக்கவும்.
02:37 “செலக்ட் ஏரியா ஆன் ஸ்க்ரீன்” என்ற தேர்வு நாம் காட்ட நினைக்கும் இடத்தை மட்டும் பதிவு செய்யும்படி வரையறுக்க வழியாகும்.
02:43 இதை தேர்வு செய்தால் கர்சர் ஒரு க்ராஸ்பேனாவாக மாறிவிடும். இதை பயன்படுத்தி தேவையான இடத்தை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.
02:51 “க்விட்” தேர்வு முக்கிய சாளரத்தில் பார்க்கும் பொத்தானைப்போலவே ரெகார்ட்மை டெஸ்க்டாப் நிரலை முடிக்க உதவுகிறது.
02:57 முக்கிய சாளரத்துக்கு வருவோம். இடது பக்கம் ஒரு சிறிய முன்பார்வை சாளரத்துடன் காட்சி பேனல் - பலகம் - உள்ளது.
03:06 இதில் நம் டெஸ்க்டாப் இன் சிறிய காட்சி தெரிகிறது. இதன் மூலம் நாம் பதிவு செய்ய வேண்டிய இடத்தை தேர்ந்தெடுக்கலாம்.
03:13 இந்த பலகத்தின் வலது பக்கம் விடியோ மற்றும் ஆடியோ தரத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ தேர்வுகள் உள்ளன.
03:22 முன்னிருப்பாக இவை இரண்டும் நூறு என அமைந்திருக்கும். இந்த அமைப்பில் நமக்கு மிக நல்ல விடியோ ஆடியோ தரம் கிடைக்கும்.
03:32 பிரச்சினை என்ன வென்றால் கோப்பின் அளவு அதிகமாக இருக்கும். இந்த காரணத்தால் ஸ்போகன் டுடோரியல் உருவாக்க 100 சதவிகிதம் விடியோ தரம் தேவையில்லை.
03:44 இதை குறைத்து/ அதிகப்படுத்தி சோதனை செய்து ஏற்றுக்கொள்ளத்தக்க விடியோ மற்றும் ஒலி தரத்துடன் உருவாக்க வேண்டும்.
03:53 நான் விடியோ தரத்தை 50 என்றும் ஆடியோ தரத்தை 100 என்றும் அமைக்கிறேன்.
4:00 இது ஏன் என்றால் மொத்த கோப்பில் ஆடியோவின் அளவு மிகச்சின்னதுதான்.
4:08 முன்னிருப்பாக ரெகார்ட்மைடெஸ்க்டாப் ஒலியை பதிவு செய்யாது. ஒலியை பதிவு செய்ய ஒலி க்வாலிடி இன் இடது பக்கம் இருக்கும் பெட்டியில் குறி இடவும்.
4:20 அட்வான்ஸ்ட் என்ற பொத்தானை பாருங்கள். அதன் மீது சொடுக்குவோம். இதோ பார்க்கும் இன்னொரு உரையாடல் பெட்டியை இது திறக்கிறது.
4:28 ரெகார்ட்மைடெஸ்க்டாப் இன் நடத்தையை நல்லபடி அமைக்க இந்த பெட்டியை ஒரு தரமாவது திறந்து பாருங்கள்.
04:35 இந்த சாளரத்தில் உள்ள எல்லா தேர்வுகளும் இதை மூடும் போது சேமிக்கப்பட்டு செயல் படுத்தப்படும். இந்த சாளரத்தில் நான்கு தேர்வுகள் உள்ளன.
04:43 முதல் டேப் பைல்ஸ். இதில் இரண்டு தேர்வுகள்.
04:48 ஒரே இடத்தில் ஒரே கோப்பு பெயருடன் இருந்தால் இருக்கும் கோப்பை நாம் உருவாக்கும் கோப்பால் மேலெழுத ஒரு வாய்ப்பு இருக்கிறது.
04:57 முன்னிருப்பாக இது செயல் நீக்கப்பட்டு இருக்கும். ஆகவே இருக்கும் கோப்புகள் தொடப்பட மாட்டா. கோப்பு பெயரின் பின்னால் ஒரு எண் சேர்க்கப்பட்டு சேமிக்கப்படும்.
05:10 ரெகார்டிங்டாட் ஓஜிவி என்று உங்கள் கோப்பை டெஸ்க்டாப்பில் சேமிக்க நினைத்தால், அதே பெயரில் டெஸ்க்டாப்பில் ஒரு கோப்பு ஏற்கெனெவே இருந்தால்,....
05:18 புதிய கோப்பு ரெகார்டிங் - 1டாட் ஓஜிவி என சேமிக்கப்படும். ரெகார்டிங் - 1டாட் ஓஜிவி என்ற பெயரிலும் அங்கே ஒரு கோப்பு இருந்தால் ரெகார்டிங் - 2டாட் ஓஜிவி என சேமிக்கப்படும். இதே போல மேலும்.
05:31 அட்வான்ஸ்ட் டேப் ஐ மீண்டும் திறக்கலாம். “ஓவர்ரைட் எக்ஜிஸ்டிங் பைல்ஸ்” என்ற தேர்வு செயலில் இருந்தால் எச்சரிக்கை இல்லாமல் பழைய கோப்புகள் நீக்கப்படும்.
05:41 ஆகவே நாம் இதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். “வொர்கிங் டைரக்டரி” தேர்வு பதிவு நடக்கும்போது எங்கு தற்காலிக கோப்புகள் வைக்கப்படும் என்பதற்கானது.
05:50 பதிவாகும்போதே குறியாக்கம் செய்யாத போது மட்டுமே இது பயனாகும்
05:55 அடுத்த டேப் "பெர்பார்மன்ஸ்”. இங்கும் ஐந்து செக் பெட்டிகள் இருக்கின்றன. "ப்ரேம்ஸ் பர் செகன்ட்" என்பதை கவனமாக அமையுங்கள்.
06:02 இந்த பாராமீட்டருக்கு வினாடிக்கு 2 ப்ரேம்கள் என்பது நல்ல அமைப்பு. ஆனால் அனிமேஷன் விடியோவானால் 15முதல் 20 வரை இது இருக்கலாம்.
06:12 “என்கோட் ஆன் தெ ஃப்ளை” தேர்வு ரெகார்ட்மைடெஸ்க்டாப் பதிவு நடக்கும் போதே குறியாக்கத்தையும் செய்ய வைக்கிறது.
06:19 முன்னிருப்பாக இது செயலிழந்து இருக்கும். சிறிய இடத்தை பிடிக்கும்போதோ அல்லது ஒரு வினாடிக்கு குறைவான ப்ரேம்களே தேவை என்றாலும் இதை பயன்படுத்தலாம்.
06:28 அதிக இடத்தை துல்லியமாக பதிவு செய்ய வேண்டுமெனில் இதை பயன்படுத்த வேண்டாம்.
06:34 முன் சொன்னபடி இந்த தேர்வை பயன்படுத்தும்போது ஆடியோ விடியோ இரண்டும் 100 சதவிகிதமாக அமைக்க வேண்டும்.
06:42 “ஜீரோ கம்ப்ரெஷன்” டேப் கேஷ் ஐ சுருக்குவதை கட்டுப்படுத்துகிறது. “க்விக் சப்சாம்ப்லிங்” வண்ணத்தை மாற்றுவதின் தரத்தை பாதிக்கிறது. இவற்றை அப்படியே விட்டுவிடுவோம்.
06:55 ““புல் ஷாட்ஸ் அட் எவெரி ப்ரேம்” முழு திரையை பதிவு செய்கிறது. முன்னிருப்பாக இது செயலில் இருக்காது.
07:02 மூன்றாம் டேப் ஒலி. சேனல்ஸ் தேர்வு உருவாகும் ஆடியோ ஓடையில் எத்தனை சானல்கள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கிறது..
07:10 அது 1(மோனோ) அல்லது 2 (ஸ்டீரியோ) ஆக இருக்கலாம். ஒரே ஒரு மைக்கிலிருந்து பதிவு செய்யும் போது ஒரு சானலுக்கு மேல் தேவையில்லை. வெளியீட்டு கோப்பின் அளவுதான் அதிகமாகும்.
07:24 “ப்ரீக்வென்சி” அமைப்பு ஒரு பதிவின் ஆடியோ தரத்தை அதிகமாக பாதிக்கும் விஷயமாகும்.
07:30 முன்னிருப்பு 22,050. இது பேச்சை பதிவு செய்யும் போது தாராளமாக போதும். ஆனால் இசையை பதிவு செய்வதானால் இதை 44,100 என அதிகரிக்க வேண்டி இருக்கலாம்.
07:40 “டிவைஸ்” என்பது "ப்லக்ஹெச்டபிள்யூ:0.0” என அமைக்கவும். இது சானல், ப்ரீக்வென்சி அமைப்புகளை துல்லியமாக கையாள உதவும்.
07:54 அப்போதுதான் ஆடியோ தடை, குதிப்பது போன்ற பிரச்சினை இல்லாமல் சீராக இயங்கும். கீழ் எழுத்துக்களில் "டிபால்ட்" என்று அமைப்பதும் சரியே.
08:05 பதிவு செய்ய வெளி ஜாக் ஐ பயன்படுத்தினால் இந்த பெட்டியை செக் செய்யுங்கள்.
08:11 சானல்கள், ப்ரீக்வென்சி மற்றும் டிவைஸ் புலங்கள் செயலிழக்கும். இந்த அமைப்புகள் ஜாக் சர்வரால் அமைக்கப்படும்.
08:19 ஜாக் ஆல் பதிவு செய்யும் முன் ஜாக் சர்வர் வேலை செய்கிறதா என்று சோதித்துக்கொள்ளுங்கள்.
08:25 கடைசி டேப் மிசிலெனஸ். இங்கு பலதரப்பட்ட தேர்வுகள் உள்ளன. அவை அதிகம் பயன்படா.
08:34 இதில் முக்கியமானது பாலோ மௌஸ் தேர்வு. இதை தேர்ந்தெடுத்தால் எங்கெல்லாம் கர்சர் போகிறதோ அங்கெல்லாம் பதிவு இடமும் நகரும்.
08:43 இந்த தேர்வு இல்லையானால் கர்சர் எங்கு போனாலும் பதிவு இடம் நகராமல் ஒரே இடமாக இருக்கும். இதை கொஞ்ச நேரத்தில் செய்து காட்டுகிறேன்.
08:53 அவுட்லைன் கேப்சர் ஏரியா ஆன் ஸ்க்ரீன் என்பதையும் தேர்வு செய்கிறேன்.
08:58 இப்போது இந்த சாளரத்தை மூடிவிடலாம். இப்படி மூடிய உடனே அத்தனை அமைப்புகளும் சேமிக்கப்படும் என்று நினைவில் கொள்க.
09:06 காட்சி பலகத்தின் முன்காட்சி சாளரத்தில் நம் மாதிரி பதிவின் பதிவு இடத்தை வரையலாம்..
09:14 சொடுக்கியின் இடது பட்டனால் சொடுக்கி தேவையான இடம் வரை இழுங்கள். பின் பட்டனை விட்டுவிடலாம்
09:20 இப்போது முன் காட்சி சாளரத்தில் சிறிய செவ்வகமும் திரையில் ஒரு பெரிய செவ்வகமும் இருக்கும். இதுவே உண்மையில் பதிவு செய்யப்படும் இடம்.
09:30 இந்த இடத்தில் நடப்பவை எல்லாம் பதிவாகும். இப்போது மாதிரி பதிவு செய்து பார்க்கலாம். .
09:39 நான் ரெகார்ட் ஐகானை சொடுக்குகிறேன். Hello and welcome to the demo recording using recordMyDesktop.
09:48 This is a demo recording to demonstrate how easy it is to create a spoken tutorial.
09:54 Click on Applications – Choose office - wordprocessor. டெமோ என்று டைப் செய்து சதுர ஐகான் மீது சொடுக்கி பதிவை நிறுத்துவோம்.
10:16 இப்போது ரெகார்ட்மைடெஸ்க்டாப் என்கோடிங் செய்து ஓஜிவி பார்மாட்டில் ஒரு நகர்படத்தை தயாரிக்கிறது.
10:24 let me close the open office writer. என்கோடிங் முடிந்துவிட்டது. நகர்படம் தயராகிவிட்டது. இதை சோதித்துப்பார்க்கலாம்.
10:31 ஹோம் அடைவில் இந்த அவுட்புட் ஓஜிவி கோப்பு இருக்கும். இதுவே இதன் முன்னிருப்பு பெயர். பதிவான படத்தை இயக்கிப்பார்க்கலாம். வலது சொடுக்கி விஎல்சி ப்லேயரால் இயக்கலாம்.
11:14 இந்த டுடோரியலில் கொடுத்த தகவல்கள் உங்களுக்கு உங்கள் கணினியில் ரெகார்ட்மைடெஸ்க்டாப் ஐ பயன்படுத்த உதவும் என்று நினைக்கிறேன்.
11:21 இந்த இலவச திறந்த மூல மென்பொருளை நிறுவி ஆடியோ விடியோ டுடோரியல் கோப்புகளை உருவாக்கிப்பாருங்கள். ஆன்லைன் காட்சியால் கற்பிக்கும் மாட்யூல்களை நீங்களே உருவாக்கிப்பாருங்கள்.
11:30 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் மும்பை ஐஐடியில் உருவாக்கிய ஸ்போகன் டுடோரியல்டாட் ஆர்க் ஒருங்கிணைக்கும் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:42 இதற்கு நிதி உதவி இந்திய அரசு எம்ஹெச்ஆர்டி மூலம் துவக்கிய தேசிய கல்வித்திட்டதின் ஐசிடி மூலம் கிடைக்கிறது.
11:51 மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
12:01 இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது. மூல பாடம் மும்பை ஐஐடி யில் ஷகினா செய்க், நான்சி அவர்கள் உருவாக்கியது. மொழியாக்கம் கடலூரில் இருந்து திவா. டப் செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது .......

Contributors and Content Editors

St-admin