Spoken Tutorial Technology/Editing spoken tutorial using Movie Maker/Tamil
அன்பு நண்பர்களே, CDEEP IIT பாம்பே சார்பாக உங்களை இந்த செய்முறை விளக்க
பயிற்சிக்கு வரவேற்கிறோம். இந்த பயிற்சியில் Windows Movie Maker ஐ பயன்படுத்தி எவ்வாறு edit செய்வது என்பதை அறிந்துகொள்வோம்.
Windows Movie Maker என்பது Microsoft கழகத்தின் ஒரு எடிட்டிங் மென்பொருள். இது அனைத்து புதிய Windows OS version - Me, XP, Vista வில் உள்ளது. உங்கள் கம்ப்யூட்டரில் இந்த மென்பொருள் இல்லை என்றால் நீங்கள் www.microsoft.com/downloads என்ற இணையதளத்தில் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
இந்த மென்பொருளை உபயோகிக்க Windows Movie Maker பட்டனை இரண்டு முறை கிளிக் செய்யவும். உங்கள் திரையில் movie project காணலாம். நீங்கள் வலது மேல்புறத்தில் மெயின் மேனுவை காணலாம். இதில் நிறைய optionகள் உள்ளது நாம் அதனை விரிவாக இந்த பயிற்சியில் அறிந்துகொள்ளலாம்.
திரையில் இடது புறத்தில் movie Tasks Panel, மத்தியில் Collection பநெல் மற்றும் வலது புறத்தில் display panel ஐ நீங்கள் காணலாம். நீங்கள் Windows Movie Maker ஐ முதல்முறையாக உபயோக படுத்தும் போது collection panel காலியாக இருக்கும். தேவையான அனைத்து video clips, audio narrations மற்றும் music files ஐ import செய்யும் போது அதனை collection panel இல் காணலாம். நீங்கள் இந்த மென்பொருளை முன்பே பயன்படுத்தி இருந்தால், நீங்கள் முன்பு பயன்படுத்திய video மற்றும் audio clips உங்கள் collection panel இல் தெரியும். Main menu வில் உள்ள file button ஐ click செய்து new project ஐ தேர்வு செய்யவும். இது புதிய movie project ஐ உங்கள் திரையில் open செய்யும். இப்போது உங்களுக்கு தேவையான file களை Windows Movie Maker க்கு import செய்யலாம்.
Movie task panel இல் பலவிதமான option களை காணலாம், இதில் Capture Video, Edit Movie, Finish Movie மற்றும் Movie Making Tips ஆகியவை முக்கியமான ஒன்றாகும். capture video option இல் import video option ஐ காணலாம், அதை click செய்யவும். மாற்றாக நீங்கள் Main menu வில் உள்ள file button ஐ click செய்து Import into Collections sub-option ஐ தேர்வு செய்யலாம். இவை இரண்டும் Import File dialog box ஐ திரையில் open செய்யும். இங்கு நீங்கள் எடிட் செய்வதற்கு தேவையான videoவை சரியான path மற்றும் file name கொடுத்து தேர்வு செய்யலாம். நான் இந்த videoவை தேர்வு செய்து import button ஐ click செய்கிறேன். தேவையான வீடியோ collection panel இல் உள்ளது, வீடியோவின் அளவு பெரியதாக இருப்பின் Windows Movie Maker தானாகவே சிறு clips களாக split செய்துகொள்ளும். Keyboard இல் CTRL+A key ஐ press செய்து அனைத்து clips களையும் தேர்வு செய்யவும், இப்போது mouse இல் right click செய்து Add to Timeline option ஐ தேர்வு செய்யவும். clips கள் timeline இல் வரிசையாக இருக்கும், நீங்கள் ஒரு ஒரு clips ஆக
collection panel இல் இருந்து drag செய்தும் time line இல் add செய்யலாம்.
சிறிய நீல செவ்வகத்தை timeline இன் மேல்புறம் கவனிக்கவும், இது frame-head என அழைக்கபடும். இது video வின் தற்போதைய position ஐ காண்பிக்கும். பொதுவா இது timeline இன் ஆரம்பத்தில் இருக்கும். முதல் clip ஐ click செய்யவும். Display panel இல் video வின் முதல் frame ஐ காணலாம். video play செய்யும்போது display panel இல் நீங்கள் காணலாம். நீங்கள் VCR control button களை display panel அடியில் காணலாம், இதை பற்றி விரிவாக காண்பதற்கு முன்பு, நான் frame head ஐ இங்கு நகர்த்துகிறேன். முதல் button play மற்றும் pause, இது play mode இல் இருக்கும் போது frame head முன் புறமாக நகர்ந்து செல்லும். இது pause mode இல் இருக்கும் போது frame head தன் நிலையிலே நிற்கும். இரண்டாவது button playback ஐ stop செய்வதற்கு பயன் படுகிறது, இதை click செய்யும்போது playback stop ஆகும் ஆனால் frame head மறுபடியும் time line இன் ஆரம்பத்திற்கு சென்றுவிடும். இப்போது நான் frame head ஐ இங்கு நகர்த்துகிறேன். முன்றாவது button ஒரு clip ஐ rewind செய்ய உதவும், frame head ஒரு clip பின்நோக்கி செல்வதை காணலாம். ஆறாவது button ஒரு clip ஐ forward செய்ய உதவும், நான்காவது மற்றும் ஐந்தாவது button கள் இவ்வாறு rewind மற்றும் forward செய்ய உதவும்.
இது split button என அழைக்கபடுகிறது, இது audio மற்றும் video clip களை தற்போதைய position இல் இரண்டாக split செய்ய உதவும். இது சக்திவாய்ந்த editing tool ஆகும்.
இப்போது timeline இன் layout ஐ விரிவாக காணலாம், timeline முன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது அவை Video, audio/music, மற்றும் title overlay. video வின் அருகில் உள்ள plus குறியை click செய்யவும். இது video timeline ஐ expand செய்து audio timeline ஐ காண்பிக்கும். இது dubbing செய்வதற்கு உதவியானது. Dubbing செய்வது எப்படி என்பதை மற்றொரு செய்முறை விளக்கப்பயிற்சியில் தெரிவித்து உள்ளோம், நீங்கள் அதனை காண ஆர்வபடலாம். நான் இப்போது video timeline button ஐ click செய்து collapse செய்கிறேன்.
Timeline ற்கு மேல் உள்ள icon கள் editing செய்வதற்கு உதவுகிறது. Zoom button, video timeline ஐ stretch செய்வதால் ஒவ்வொரு video frame களை edit செய்யலாம். Zoom out button, video வை collapse செய்வதால் நாம் மொத்த video வை timeline ற்குள் காணலாம். இது rewind timeline button. இதை press செய்யும் பொது frame head உங்கள் வீடியோவின் ஆரம்பத்திற்குசெல்லும். இது play timeline button, இதை click செய்வதன் மூலம் வீடியோவைdisplay panel இல் play செய்யலாம். இது VCR control play button போலவேபணிபுரிகிறது. Windows Movie Maker பற்றி இன்னும் அறிந்து கொள்ள movie tasks panel இல் உள்ள Movie Making Tips option ஐ ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம்.
இப்போது நாம் Windows Movie Maker screen இன் அடிப்படை layout ஐ பார்த்தோம், நாம் எவ்வாறு video portion ஐ add செய்வது மற்றும் remove செய்வது என்பதை காணலாம். Video import செய்தப்பிறகு அதனை ஆரம்பம் முதல் முடிவு வரை play செய்து, எந்த எந்த இடங்களை நீங்கள் edit செய்ய வேண்டும் என்பதை குறித்து கொள்ளவும். நான் இந்த இடத்தில் சிறு நொடிகள் வீடியோவை remove செய்ய வேண்டும் அதனால் frame head ஐ இங்கு நகர்த்தி clip ஐ play செய்யவும். இங்கு playback ஐ pause செய்கிறேன் ஏன் என்றால், இது தான்நான் remove செய்ய வேண்டிய video வின் ஆரம்பப்பகுதி. இப்பொழுது நான்split button ஐ click செய்கிறேன், இந்த இடத்தில் clip இரண்டாக பிரிவதை
கவனிக்கவும். இங்கு நான் மீண்டும் play செய்து delete செய்ய வேண்டிய video முடியும் இடத்தில் pause செய்து spilt button ஐ click செய்வதன்மூலம் video மறுபடியும் split செய்வதை காணலாம். இப்பொழுது நான் இந்தclip ஐ select செய்து keyboard ல் உள்ள delete key ஐ press செய்வதன் மூலம் வீடியோவை remove செய்யலாம். இதை போலவே நாம் வீடியோவில் இருந்து மற்ற portion களை delete செய்யலாம்.
இனி நாம் எப்படி மற்றொரு வீடியோவை add செய்வது என்பதை பார்போம். நான் இந்த சிறிய clip ஐ என் வீடியோவில் சேர்க்க விரும்புகிறேன். அதனால் நான் இந்த வீடியோவை collection panel ற்கு import செய்து கொள்கிறேன், clip இப்பொழுது collection panel ல் உள்ளது. நான் இந்த clip ஐ drag செய்து timeline இல் வேண்டிய இடத்தில drop செய்வதம் மூலம் clip timeline இல் தெரிகிறது. இதை போலவே, நாம் எந்த portion ஐயும் வீடியோவில் add செய்யலாம். இதே முறையை பயன்படுத்தி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவீடியோக்களை இனணக்கலாம்.
நான் இப்பொழுது எவ்வாறு clip அல்லது clip portion இன் நீளத்தை அதிகப்படுத்துவது என்பதை செய்து காட்ட விரும்புகிறேன். இது dubbing செய்யும் பொழுது மிக உதவியாக இருக்கும். சில சமயங்களில் dub செய்ய வேண்டிய மொழி original மொழியை விட அதிக வார்த்தைகள் கொண்டு இருக்கும், அந்த நேரங்களில் நமக்கு video clip களில் அதிக நேரம்தேவைப்படும். உங்கள்ளுக்கு தேவையான பகுதியை முன்பு சொன்ன முறைப்படிதேர்வு செய்யவும். நான் இதை செய்து காட்டுகிறேன், வீடியோவை இங்கு clipசெய்யவும்- play மற்றும் pause, மறுபடியும் வீடியோவை clip செய்யவும் – clip செய்த பகுதியை தேர்வு செய்யவும் - mouse இல் right click செய்து copy ஐ தேர்வு செய்யவும் - frame head ஐ paste செய்ய வேண்டிய இடத்திற்கு நகற்றவும் மீண்டும் right click செய்து paste ஐ தேர்வு செய்யவும். மாற்றாக நீங்கள் keyboard இல் CTRL+C copy செய்வதற்கும் மற்றும் CTRL+V paste செய்வதற்கும் பயன்படுத்தலாம்.
இந்த வசதிகளை, உங்கள் வீடியோவை Windows Movie Maker ல் edit செய்ய பயன்படுத்துங்கள். முன்பு சொன்னதை போல் நீங்கள் எவ்வாறு dubbing செய்வது என்கின்ற செய்முறை பயிற்சியை காண விரும்பலாம். நீங்கள் editing மற்றும் dubbing இன் அடிப்படையை கற்ற பிறகு, எவ்வாறு video effects மற்றும் transistion, title அல்லது credit மற்றும் audio அல்லது music ஐ உங்கள் வீடியோவில் add செய்வது என்பதை மற்ற செய்முறை விளக்கப்பயிற்சியில் கண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த பயிற்சி
உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம். இப்படிக்கு அன்புடன் Ramkumar, IIT Bombay வில் இருந்து. இந்த செய்முறை பயிற்சியை கண்டதற்கு நன்றி.