Spoken Tutorial Technology/Dubbing a spoken tutorial using Audacity and ffmpeg/Tamil
From Process | Spoken-Tutorial
timing | Narration |
---|---|
00:00 | வணக்கம் நண்பர்களே, இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. லினக்ஸ் இயங்குதளத்தில் எப்படி ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்வதென பார்க்கலாம். |
00:10 | இதற்கு உங்களுக்கு தேவையானதெல்லாம் ஒலி உள்ளீடு செய்ய மைக் கொண்ட ஹெட்செட் அல்லது தனி மைக்குடன் கணினியில் இணைக்கக்கூடிய ஒலி பெருக்கிகள். |
00:19 | அடாசிடி என்பது ஒலியை பதிவு செய்யவும் திருத்தவும் பயன்படும் திறந்த மூல மென்பொருள் |
00:24 | இது மேக், விண்டோஸ், க்னூ லினக்ஸ் ஆகிய அனத்து இயங்கு தளங்களுக்கும் கிடைக்கிறது. |
00:32 | இதை இலவசமாக கீழ் காணும் வலைச்சுட்டியில் இருந்து தரவிறக்கிக்கொள்ளலாம். audacity.sourceforge.net/download |
00:39 | நான் உபுண்டு லீனக்ஸ் 10.04 ஐ பயன்படுத்துக்கிறேன். |
00:44 | நான் ஏற்கெனெவே அடாசிடி பதிப்பு 1.3 ஐ ஸினாப்டிக் பாக்கேஜ் மானேஜர் மூலம் என் கணினியில் நிறுவிவிட்டேன். |
00:52 | உபுண்டு லீனக்ஸ் இல் எப்படி நிரல்களை நிறுவுவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் |
00:57 | இதே வலைத்தளத்தில் உள்ள ஸ்போகன் டுடோரியல் பக்கங்களை பாருங்கள் |
01:02 | நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் இதன் அசல் விடியோவை பார்த்து
கேட்பதே. |
01:09 | அடுத்து அதே நேரம் அல்லது குறைவாக எடுத்துக்கொண்டு பேசும்படியாக உரையை மாற்ற வேண்டும். |
01:18 | இது எப்படி எனில் ஒவ்வொரு வாக்கியத்தின் துவக்க நேரத்தை குறித்துக்கொள்ள வேண்டும். |
01:23 | ஒவ்வொன்றுக்கும் இயலாது எனில் இரண்டு வாக்கியத்துக்கான நேரம் |
01:29 | அதாவது முதல் வாக்கியத்தை சரியான நேரத்தில் முடிக்க முடியாவிட்டாலும் அடுத்த வாக்கிய முடிவில் முடித்துவிட வேண்டும். |
01:37 | இது சிக்கலானால், பொருள் மாறாது எனில் சில சொற்களையோ வாக்கியங்களையோ கூட விட்டு விடலாம் |
01:42 | இதை உறுதி செய்துகொள்ளுங்கள். |
01:48 | இப்போது அடாசிடியை இயக்குவோம். பயன்பாடுகள், ஒலி விடியோவை சொடுக்கி அடாசிடியை தேர்ந்தெடுங்கள். |
01:58 | இது உங்கள் திரையில் காலி திட்டம் ஒன்றை திறக்கும். மெனுவில் பல தேர்வுகள் உள்ளன. கோப்பு, திருத்தம், காட்சி, எடுத்துச்செல்லுதல், தடங்கள், மற்றவை ஆகிய தேர்வுகள் உள்ளன. |
02:11 | இவற்றைக்குறித்து பின்னால் போகிற போக்கில் காணலாம். முக்கிய மெனுவின் கீழே விசிஆர் கண்ட்ரோல்கள் உள்ளன. பாஸ், ப்ளே, ஸ்டாப், பின் செல், முன் செல், ரெகார்ட் ஆகியன அவை |
02:25 | இதற்கு அடுத்து ஒலி கருவிப்பட்டியை காணலாம். |
02:30 | இதில் தேர்வு கருவியும் நேர நகர்த்து கருவியும் உள்ளன. இவற்றை இந்த பாடத்தில் நாம் பயன்படுத்துவோம். |
02:36 | முன்னிருப்பாக தேர்வு கருவி செயலில் இருக்கும். |
02:40 | இப்போது நாம் ஒரு ஒலி மீள் பதிவை செய்யலாம். ஆங்கிலத்தில் ஒரு சைலேப் பாடம் காட்டுகிறேன். மேட்ரிக்ஸ் ஆபரேஷன் டாட் டபில்யூஎம்வி. |
03:03 | இந்த பாடத்தை நான் இப்போது ஹிந்திக்கு ஒலி மறு பதிவு செய்ய வேண்டும். இதன் மொழி பெயர்ப்பை ஏற்கெனவே செய்துவிட்டேன். முன் சொன்னபடி நேரங்களையும் குறித்துக்கொண்டேன். |
03:14 | இப்போது இதை இங்கே பதிவு செய்யப்போகிறேன். ஒலிப்பதிவுக்கு ரெகார்ட் பொத்தானை சொடுக்கி பேச ஆரம்பிக்க வேண்டியதுதான். |
03:22 | (साइलैब के इस्तेमाल से मैट्रिक्स ऑपरेशन के इस ट्यूटोरियल में आप सबका स्वागत है । इस ट्यूटोरियल के अभ्यास लिए आपके सिस्टम में साइलैब का संस्थापन होना आवश्यक है ।) |
03:32 | ஸ்டாப் பொத்தானை சொடுக்கி ஒலிப்பதிவை நிறுத்தலாம்.ஒலி நேர தடத்தில் பேச்சை 2 ஸ்டீரியோ தடங்களாக காணலாம். |
03:43 | முள் போல இருப்பவை ஒலி அலைகள். ஸ்டீரியோ தடங்களில் லேபிலுடன் இடப்பக்கம் ஒரு இடமும், வலப்பக்கம் இரண்டு அலைகளும் உள்ளன. |
03:50 | இவை முறையே இடது வலது உள்ளீட்டு ஓடைகளாகும். |
03:56 | ஆதர்சமாக வேலையை ஒரே ஒலிப் பதிவில் முடித்துவிடுங்கள். வாக்கியங்களுக்கு இடையில் ஒரு வினாடி இடைவெளி கொடுக்க மறக்காதீர்கள். |
04:08 | இப்போது ஒவ்வொரு வாக்கியத்தின் ஆரம்பத்திலும் பதிவை வெட்டி பல சிறு பதிவுகளாக ஆக்குங்கள். கன்ட்ரோல் ஐ இதற்கான விரைவு விசை. |
04:19 | ஒலியை நான் இங்கு வெட்டுகிறேன்.வெட்டிய பகுதியை முன் குறித்துக்கொண்ட நேரத்துக்கு ஏற்ப நேர நகர்த்து கருவியால் நகர்த்தலாம். |
04:27 | நேர நகர்த்து கருவியை தேர்ந்தெடுங்கள். கர்சர் இப்போது இரட்டை தலை அம்பாக இருப்பதை பாருங்கள். |
04:33 | ஒலித்துண்டை இந்த நேரத்துக்கு நகர்த்துகிறேன். கடைசி துண்டில் ஆரம்பித்து பின்னே செல்ல வேண்டும் என்று ஞாபகம் இருக்கட்டும். |
04:42 | இலக்கில் இடம் செய்து கொடுக்காவிட்டால் ஒலித்துண்டு அங்கே வர முடியாது. |
04:49 | அடுத்த வாக்கியத்தை பேச ஆரம்பிக்க தேர்வு கருவி மீது சொடுக்கி பின் நேர ஓடையில் ஏதேனும் ஒரு தடத்தை சொடுக்கவும். |
05:01 | இப்போது ரெகார்ட் பொத்தானை சொடுக்கி பேச ஆரம்பிக்கவும். ஸ்டாப் பொத்தானை சொடுக்கி நிறுத்தவும். |
05:12 | இந்த இரண்டாம் பேச்சு இன்னொரு ஸ்டீரியோ தடத்தில் வரும். இதே போல நீங்கள் பல பேச்சுக்களை பதிவு செய்து வித்தியாசமான தடங்களில் அவற்றை காணலாம். |
05:22 | இப்போது இவற்றை எல்லாம் ஒரே ஒலித்தடமாக சேர்ப்பதை காணலாம். நேர நகர்த்து கருவியை தேர்ந்தெடுங்கள். |
05:32 | வலது சொடுக்கால் ஒலித்துண்டை தேர்ந்தெடுத்து முதல் ஒலித்தடத்தின் பின்னால் இழுத்துவிடுங்கள். இதே போல் மற்றவற்றையும் செய்க. |
05:43 | லேபிள் இடத்தில் உள்ள X பொத்தானை சொடுக்கி ஒலித்தடத்தை நீக்கலாம். இப்போது காலியாக இருக்கும் இரண்டாம் தடத்தை நீக்கிக்காட்டுகிறேன். |
05:51 | முதல் தடத்துக்கு துண்டுகளை நகர்த்தும் போது முன்னே பார்த்தது போல வாக்கிய துவக்கம், துவக்க நேர இடத்துக்கு பொருந்தும்படி நகர்த்த வேண்டும். |
06:01 | நேரங்களுக்கு பொருந்த எல்லா வாக்கியங்களையும் ஒத்திசைத்த பின் நம் வேலையை சேமித்துவிடலாம். இதற்கு கோப்பு மெனுவுக்குபோய் திட்டத்தை சேவ் ப்ராஜக்ட் ஆஸ் என்பதில் சொடுக்கவும். |
06:15 | ஒரு உரையாடல் பெட்டி திறக்கும். சரி என்பதில் சொடுக்கவும். அடுத்து அது பெயரை கேட்கும். நான் அதற்கு ஹிந்தி மேட்ரிக்ஸ் ஆபரேஷன் என பெயர் தருகிறேன். |
06:29 | அடுத்து சேமிக்க இடத்தை கேட்கும். நான் மேல்மேசையை தேர்ந்தெடுக்கிறேன். பின் சேமி ஐ சொடுக்குகிறேன். இது கோப்பை டாட் aup கோப்பாக சேமிக்கும். |
06:41 | இறுதியாக கோப்பை தேவையான ஒலி ஒழுங்குக்கு மாற்றவும். உதாரணம் வேவ், எம்பித்ரீ மற்றவை. |
06:49 | இதற்கு மெனுவுக்குப் போய் கோப்பு, ஏற்றுமதி தேர்வுகள் ஆகியவற்றை வரிசையாக சொடுக்கவும். |
06:58 | அது கோப்பின் பெயரை கேட்கும். நான் சைலேப் ஹிந்தி மேட்ரிக்ஸ் ஆபரேஷன் என பெயரிடுகிறேன். |
07:06 | அத்துடன் எங்கே சேமிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுங்கள். |
07:12 | அடுத்து சேமிக்க ஒழுங்கை தேர்வு செய்ய வேண்டும். நான் ஆக் என தேர்ந்தெடுக்கிறேன். பின் சேவ் ஐ சொடுக்குகிறேன். |
07:21 | அடுத்து நமக்கு மெடா தரவை திருத்து என பெட்டி கிடைக்கும். இங்கு நாம் நம் தேவைக்கு ஏற்ப கலைஞர் பெயரையும் மற்ற விவரங்களையும் சேர்க்கலாம். |
07:29 | பின் சரி ஐ சொடுக்கவும்.இதுவே உங்கள் இறுதி ஒலிக் கோப்பு. |
07:35 | எஃபெஃபெம்பெக் என்பது திறந்த மூல ஒலி ஒளி மாற்றி. இது பெரும்பாலான செந்தர கோடக் களை ஆதரிக்கிறது. இதனால் ஒரு ஒழுங்கிலிருந்து இன்னொரு ஒழுங்குக்கு எளிதில் கோப்பை மாற்ற இயலும். |
07:48 | இதன் பைனரியை இங்கிருந்து தரவிறகிக்கொள்ளலாம் http://ffmpeg.org/. |
07:56 | டவுன்லோட் ஐ சொடுக்கி தேவையானதுக்கு ஸ்க்ரால் செய்யவும். |
08:09 | லீனக்ஸில் எப்படி பொதிகளை நிறுவுவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் இதே வலைத்தளத்தில் உள்ள ஸ்போகன் டுடோரியல் பக்கங்களை பாருங்கள். எஃபெஃபெம்பெக் ஐ நிறுவியபின், |
08:21 | எளிய ஆனால் சக்தி வாய்ந்த கட்டளைகள் மூலம் ஒரு ஊடக கோப்பிலிருந்து விடியோ அல்லது ஒலி தரவுகளை தனித்தனியாக பிரித்தெடுக்கவோ அல்லது இரண்டு வெவ்வேறு கோப்புகளில் இருந்து ஒலி விடியோ கோப்புகளை ஒன்றாக இணைக்கவோ இயலும். |
08:37 | இதற்கு முனைய சாளரத்தை திறக்கிறேன். |
08:41 | இப்போது எங்கிருக்கிறோம் என அறிய பிடபிள்யூடி என உள்டுகிறேன். அது இப்போது இருக்கும் அடைவை காட்டுகிறது. எல் எஸ் என உள்ளிடுகிறேன். அது இந்த அடைவில் உள்ள எல்லா அடைவுகளையும் கோப்புகளையும் பட்டியலிடுகிறது. |
08:56 | இப்போது டெஸ்க்டாப் அடைவுக்கு சென்று சோதிக்கிறேன். கன்ட்ரோல் எல் திரையை சுத்தம் செய்கிறது. இந்த அடைவில் உள்ள எல்லா கோப்புகளையும் பட்டியலிட எல் எஸ் என உள்ளிடுகிறேன். |
09:15 | இப்போது ஒரு கட்டளையை உள்ளிடுகிறேன் - ffmpeg -i compiling.wmv TEST0.ogv |
09:30 | -i என்ற மாற்றி அடுத்து வருவது உள்ளீட்டு கோப்பு என குறிக்கிறது. இங்கு compiling.wmv என்பது உள்ளீட்டு கோப்பு. |
09:42 | இந்த -i தேர்வை விட்டுவிட்டால் எஃபெஃபெம்பெக் வெளியீட்டு கோப்பை உருவாக்கும்போது அந்த கோப்பை மேலெழுதுகிறது. |
09:50 | வெளியீட்டு கோப்பின் நீட்சியை பார்த்து எந்த ஒழுங்கில் இருக்க வேண்டும் எந்த கோடக் ஐ பயன்படுத்த வேன்டும் என எஃபெஃபெம்பெக் முடிவு செய்கிறது. எனினும் கட்டளை வரியில் தரும் மதிப்புகள் மூலம் இதை மீறலாம். |
10:03 | சிலதை சற்று நேரத்தில் பார்க்கலாம். இந்த கட்டளை விடியோவை ஒரு ஒழுங்கில் இருந்து இன்னொன்றுக்கு மாற்ற மிகவும் பயனாகிறது. |
10:12 | உள்ளிட்ட கட்டளையை செயலாக்க என்டர் விசையை தட்ட வேண்டும். எனினும் அதை விடுத்து இப்போது அடுத்து வருவதை பார்க்கலாம். |
10:18 | முனைய சாளரத்தில் எஃபெஃபெம்பெக் கட்டளையை உள்ளிட்டு மூல ஸ்போகன் பாடத்திலிருந்து விடியோவை மட்டும் பிரித்தெடுக்கலாம். |
10:26 | இப்படி செய்ய ffmpeg -i functions.ogv -an -vcodec copy TEST1.ogv என உள்ளிடுங்கள். |
10:45 | '-an' என்ற மாற்றி தானியங்கியாக எல்லா ஒலி தடங்களையும் வெளியீட்டு கோப்பிலிருந்து நீக்கி விடியோவை மட்டும் வைத்துக்கொள்கிறது. TEST1.ogv என்பது வெளியீட்டுக்கோப்பு. |
10:59 | என்டர் விசையை அழுத்தவும். இப்போது விடியோவை மட்டும் பிரித்து எடுத்துவிட்டோம். அதாவது மூல கோப்பில் இருந்த ஒலித்தடங்கள் இதில் இல்லை. |
11:09 | டெஸ்ட் அடைவை இப்போது திறக்கலாம். Test1.ogv. இதோ இருக்கிறது. இதை இப்போது இயக்கலாம். <5-6 வினாடிகள் இயக்கவும்> |
11:25 | முனைய சாளரத்தை இப்போது மீண்டும் துடைக்கலாம். இப்போது - ffmpeg -i functions_hindi.ogv -vn -acodec copy TEST2.ogg |
11:54 | '-vn' என்ற மாற்றி தானியங்கியாக எல்லா விடியோவையும் வெளியீட்டு கோப்பிலிருந்து நீக்கி ஒலி தடங்களை மட்டும் வைத்துக்கொள்கிறது. கட்டளையை இயக்க என்டர் விசையை அழுத்தவும். |
12:04 | இப்போது ஒலித்தடங்களை மட்டும் பிரித்து எடுத்துவிட்டோம். அதாவது மூல கோப்பில் இருந்த விடியோ இதில் இல்லை. |
12:12 | இதை சோதிக்கலாம். டெஸ்ட் அடைவை மீண்டும் திறக்கலாம். TEST2.ogg இதோ இருக்கிறது. இதை இப்போது இயக்கலாம். <5-6 வினாடிகள் இயக்கவும்> சரி. |
12:26 | இப்போது இதை மூடிவிட்டு மீண்டும் முனையத்துக்கு செல்வோம். கன்ட்ரோல் எல் மூலம் திரையை சுத்தம் செய்கிறேன். |
12:35 | இப்போது மூல டுடோரியல் பாடத்திலிருந்து சேமித்த ஒலித்தடங்களை எப்படி விடியோவுடன் சேர்ப்பது என காணலாம். |
12:42 | . முனையத்தில் - ffmpeg -i TEST1.ogv -i TEST2.ogg -acodec libvorbis -vcodec copy FINAL.ogv என உள்ளிடுக. என்டர் விசையை அழுத்துக. |
13:20 | இப்போது குறியாக்கம் நடக்கிறது. முனையத்தை சுத்தம் செய்வோம். சோதனை அடைவை திறப்போம். நாம் சேமித்த FINAL.ogv இதோ இருக்கிறது. |
13:34 | இதை இப்போது இயக்கலாம். <5-6 வினாடிகள் இயக்கவும்> சுலபம்தானே? |
13:46 | மூல ஸ்போகன் டுடோரியல் பாட ஒலித்தடங்களை டப் செய்த ஒலியால் மாற்ற கெடென்லைவ், கினோ, லைவ்ஸ் போன்ற திருத்தி பொதிகளையும் பயன்படுத்தலாம். |
13:59 | டப் செய்து அளிப்போரின் வசதிக்காக நாங்கள் பைதானில் வேலைசெய்யும் வரைகலை இடைமுக பயன்பாட்டை உருவாக்கி வருகிறோம். |
14:06 | இது எஃபெஃபெம்பெக் கட்டளைகள் செய்யும் அனைத்து வேலையையும் செய்ய வசதியாக இருக்கும். அதாவது, ஒலியை பிரிக்க, விடியோவை பிரிக்க, ஒருங்கிணைக்க. |
14:15 | விரைவில் இதுவும் இதற்கான ஸ்போகன் டுடோரியல் பாடமும் இந்த தளத்தில் கிடைக்கும். |
14:22 | அவ்வளவுதான். இது வரை பார்த்ததன் சுருக்கத்தை இப்போது காணலாம். ஸினாப்டிக் வழியாக அடாசிடி ஐ நிறுவிக்கொள்ளுங்கள். |
14:30 | மூல டுடோரியல் பாடத்தை கேட்டு வாக்கியங்கள் துவங்கும் நேரங்களை குறித்துக்கொள்ளவும். அடாசிடியை திறக்கவும். வாக்கியங்களை தகுந்த இடைவெளிகளுடன் பேசி பதிவு செய்க. ஆதர்சமாக ஒரே முயற்சியில் இதை முடிக்கவும். |
14:44 | ஒலித்தடங்களை துண்டுகளாக வெட்டவும். அவற்றை பின்னாலிருந்து துவங்கி சரியான இடத்தில் பொருத்துக. |
14:52 | முடிந்த பிறகு ஆக் ஒழுங்கில் ஒலியை சேமிக்கவும். எஃபெஃபெம்பெக் கட்டளையால் விடியோவை தனியாக ஸ்போகன் டுடோரியலில் இருந்து பிரிக்கவும். |
15:04 | நாம் பதிவு செய்த ஒலித்தடத்தை விடியோவுடன் சேர்க்கவும். டப் செய்த பாடம் தயார். |
15:11 | ஸ்போகன் பாடங்கள் மும்பை ஐஐடியில் உருவாக்கிய ஸ்போகன் டுடோரியல்டாட் ஆர்க் ஒருங்கிணைக்கும் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
15:25 | இதற்கு நிதி உதவி இந்திய அரசு எம்ஹெச்ஆர்டி மூலம் துவக்கிய தேசிய கல்வித்திட்டதின் ஐசிடி மூலம் கிடைக்கிறது. |
15:34 | மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
15:47 | மூல பாடம் மும்பை ஐஐடி யில் ஷகினா செய்க், நான்சி அவர்கள் உருவாக்கியது. தமிழாக்கம் கடலூரில் இருந்து திவா. டப் செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது xxx |