Spoken Tutorial Technology/Creation of spoken tutorial using recordMyDesktop/Tamil
From Process | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | வணக்கம் நண்பர்களே, இந்த “ஹவ் டு யூஸ் ரெகார்ட்மை டெஸ்க்டாப் ” ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
0:05 | ரெகார்ட்மை டெஸ்க்டாப் என்பது உபுன்டு லீனக்ஸில் திரையை பதிவு செய்ய பயன்படும் திறந்த மூல மென்பொருள். |
0:13 | திரைப்பதிவு மென்பொருள் பற்றி மேலும் அறிய இதே வலைத்தளத்தில் உள்ள ஹௌ டு யூஸ் கேம் ஸ்டூடியோ எனும் ஸ்போகன் டுடோரியலை பாருங்கள். |
0:21 | நான் ஏற்கெனெவே ஜிடிகே- ரெகார்ட்மை டெஸ்க்டாப் பதிப்பு 0.3.8 ஐ ஸினாப்டிக் பாக்கேஜ் மானேஜர் மூலம் என் கணினியில் நிறுவிவிட்டேன். |
0:33 | உபுண்டு லீனக்ஸ் இல் எப்படி நிரல்களை நிறுவுவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் இதே வலைத்தளத்தில் உள்ள ஸ்போகன் டுடோரியல் பக்கங்களை பாருங்கள். |
0:43 | ரெகார்ட்மை டெஸ்க்டாப் ஐ வெற்றிகரமாக நிறுவியபின் திரையின் மேலே உள்ள மெய்ன் மெனுவுக்கு செல்லுங்கள். |
0:51 | அப்ளிகேஷன்ஸ் , சவுன்ட் , விடியோவை சொடுக்கினால்... |
0:55 | கான்டெக்ஸ்ட் மெனுவில் ரெகார்ட்மை டெஸ்க்டாப் ஐ பார்க்கலாம். அதை சொடுக்குங்கள். |
01:02 | இது அதன் அப்ளிகேஷன் சாளரத்தை திறக்கும். |
01:07 | இந்த முதன்மை அப்ளிகேஷன் சாளரம் ரெகார்ட் செய்ய சில அடிப்படை பாராமீட்டர்களை வரையறுக்க உதவுகிறது. இதன் ட்ரே ஐகான் உங்கள் பதிவுகளின் இயக்க கன்ட்ரோல் ஐ கவனித்துக்கொள்ள பயன்படுகிறது. |
01:19 | உங்கள் ஸிஸ்டம் ட்ரே ஐகானில் ஒரு புது உள்ளீடு இருப்பதை கவனிக்கவும். இந்த சிவப்பு வட்டம் ரெகார்ட் பட்டன் நிலையை குறிக்கிறது. |
01:27 | இந்த ஸிஸ்டம் ட்ரே ஐகான் மூன்று நிலைகளில் இருக்கலாம்:
|
01:34 | ரெகார்ட்மை டெஸ்க்டாப் துவங்கும்போது இந்த ஐகான் சிவப்பு வட்டமாக, அதாவது ரெகார்ட் சின்னமாக இருக்கும். |
01:41 | பதிவை துவக்கிவிட்டால் இது ஒரு சதுரமாக அதாவது ஸ்டாப் சின்னமாக இருக்கும். . |
01:46 | இங்கே இரண்டு சதுரங்கள் இருப்பதை கவனியுங்கள். |
01:48 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் ரெகார்ட்மை டெஸ்க்டாப் ஐ பயன்படுத்துவதால் இப்படி நிகழ்கிறது. |
01:51 | பதிவை கொஞ்சம் நிறுத்த -பாஸ் செய்ய- இந்த சதுரத்தின் மீது வலது சொடுக்கு சொடுக்க வேண்டும். சின்னமும் இரட்டை கோடு கொண்ட பாஸ் நிலை - அதாவது செங்குத்தான இரட்டை மெல்லிய நீள்சதுரங்களாக காணலாம் |
02:03 | மீண்டும் பதிவை தொடர இந்த பாஸ் சின்னத்தின் மேலே சொடுக்க வேண்டும். |
02:07 | பதிவை நிறுத்த சதுரத்தின் மீது சொடுக்க வேண்டும். |
02:12 | பாராமீட்டர்களை அமைக்கு முன் ஒரு முக்கிய செய்தி சொல்லுகிறேன். |
02:18 | சிவப்பு சிஸ்டம் ட்ரே சின்னத்தில் ரைட் க்ளிக் - சொடுக்குங்கள். இங்கே முக்கிய அப்ளிகேஷன் சாளரத்தை காட்டவோ அல்லது மறைக்கவோ தேர்வு இருக்கிறது. |
02:26 | ஒரு பதிவு அமர்வை ஆரம்பிக்கும் போது முன்னிருப்பாக இந்த சாளரம் தானே மறைத்துக்கொள்ளும். |
02:32 | எப்போதும் காட்ட வேண்டுமானால் இந்த தேர்வை மாற்றி அமைக்கவும். |
02:37 | “செலக்ட் ஏரியா ஆன் ஸ்க்ரீன்” என்ற தேர்வு நாம் காட்ட நினைக்கும் இடத்தை மட்டும் பதிவு செய்யும்படி வரையறுக்க வழியாகும். |
02:43 | இதை தேர்வு செய்தால் கர்சர் ஒரு க்ராஸ்பேனாவாக மாறிவிடும். இதை பயன்படுத்தி தேவையான இடத்தை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். |
02:51 | “க்விட்” தேர்வு முக்கிய சாளரத்தில் பார்க்கும் பொத்தானைப்போலவே ரெகார்ட்மை டெஸ்க்டாப் நிரலை முடிக்க உதவுகிறது. |
02:57 | முக்கிய சாளரத்துக்கு வருவோம். இடது பக்கம் ஒரு சிறிய முன்பார்வை சாளரத்துடன் காட்சி பேனல் - பலகம் - உள்ளது. |
03:06 | இதில் நம் டெஸ்க்டாப் இன் சிறிய காட்சி தெரிகிறது. இதன் மூலம் நாம் பதிவு செய்ய வேண்டிய இடத்தை தேர்ந்தெடுக்கலாம். |
03:13 | இந்த பலகத்தின் வலது பக்கம் விடியோ மற்றும் ஆடியோ தரத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ தேர்வுகள் உள்ளன. |
03:22 | முன்னிருப்பாக இவை இரண்டும் நூறு என அமைந்திருக்கும். இந்த அமைப்பில் நமக்கு மிக நல்ல விடியோ ஆடியோ தரம் கிடைக்கும். |
03:32 | பிரச்சினை என்ன வென்றால் கோப்பின் அளவு அதிகமாக இருக்கும். இந்த காரணத்தால் ஸ்போகன் டுடோரியல் உருவாக்க 100 சதவிகிதம் விடியோ தரம் தேவையில்லை. |
03:44 | இதை குறைத்து/ அதிகப்படுத்தி சோதனை செய்து ஏற்றுக்கொள்ளத்தக்க விடியோ மற்றும் ஒலி தரத்துடன் உருவாக்க வேண்டும். |
03:53 | நான் விடியோ தரத்தை 50 என்றும் ஆடியோ தரத்தை 100 என்றும் அமைக்கிறேன். |
4:00 | இது ஏன் என்றால் மொத்த கோப்பில் ஆடியோவின் அளவு மிகச்சின்னதுதான். |
4:08 | முன்னிருப்பாக ரெகார்ட்மைடெஸ்க்டாப் ஒலியை பதிவு செய்யாது. ஒலியை பதிவு செய்ய ஒலி க்வாலிடி இன் இடது பக்கம் இருக்கும் பெட்டியில் குறி இடவும். |
4:20 | அட்வான்ஸ்ட் என்ற பொத்தானை பாருங்கள். அதன் மீது சொடுக்குவோம். இதோ பார்க்கும் இன்னொரு உரையாடல் பெட்டியை இது திறக்கிறது. |
4:28 | ரெகார்ட்மைடெஸ்க்டாப் இன் நடத்தையை நல்லபடி அமைக்க இந்த பெட்டியை ஒரு தரமாவது திறந்து பாருங்கள். |
04:35 | இந்த சாளரத்தில் உள்ள எல்லா தேர்வுகளும் இதை மூடும் போது சேமிக்கப்பட்டு செயல் படுத்தப்படும். இந்த சாளரத்தில் நான்கு தேர்வுகள் உள்ளன. |
04:43 | முதல் டேப் பைல்ஸ். இதில் இரண்டு தேர்வுகள். |
04:48 | ஒரே இடத்தில் ஒரே கோப்பு பெயருடன் இருந்தால் இருக்கும் கோப்பை நாம் உருவாக்கும் கோப்பால் மேலெழுத ஒரு வாய்ப்பு இருக்கிறது. |
04:57 | முன்னிருப்பாக இது செயல் நீக்கப்பட்டு இருக்கும். ஆகவே இருக்கும் கோப்புகள் தொடப்பட மாட்டா. கோப்பு பெயரின் பின்னால் ஒரு எண் சேர்க்கப்பட்டு சேமிக்கப்படும். |
05:10 | ரெகார்டிங்டாட் ஓஜிவி என்று உங்கள் கோப்பை டெஸ்க்டாப்பில் சேமிக்க நினைத்தால், அதே பெயரில் டெஸ்க்டாப்பில் ஒரு கோப்பு ஏற்கெனெவே இருந்தால்,.... |
05:18 | புதிய கோப்பு ரெகார்டிங் - 1டாட் ஓஜிவி என சேமிக்கப்படும். ரெகார்டிங் - 1டாட் ஓஜிவி என்ற பெயரிலும் அங்கே ஒரு கோப்பு இருந்தால் ரெகார்டிங் - 2டாட் ஓஜிவி என சேமிக்கப்படும். இதே போல மேலும். |
05:31 | அட்வான்ஸ்ட் டேப் ஐ மீண்டும் திறக்கலாம். “ஓவர்ரைட் எக்ஜிஸ்டிங் பைல்ஸ்” என்ற தேர்வு செயலில் இருந்தால் எச்சரிக்கை இல்லாமல் பழைய கோப்புகள் நீக்கப்படும். |
05:41 | ஆகவே நாம் இதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். “வொர்கிங் டைரக்டரி” தேர்வு பதிவு நடக்கும்போது எங்கு தற்காலிக கோப்புகள் வைக்கப்படும் என்பதற்கானது. |
05:50 | பதிவாகும்போதே குறியாக்கம் செய்யாத போது மட்டுமே இது பயனாகும் |
05:55 | அடுத்த டேப் "பெர்பார்மன்ஸ்”. இங்கும் ஐந்து செக் பெட்டிகள் இருக்கின்றன. "ப்ரேம்ஸ் பர் செகன்ட்" என்பதை கவனமாக அமையுங்கள். |
06:02 | இந்த பாராமீட்டருக்கு வினாடிக்கு 2 ப்ரேம்கள் என்பது நல்ல அமைப்பு. ஆனால் அனிமேஷன் விடியோவானால் 15முதல் 20 வரை இது இருக்கலாம். |
06:12 | “என்கோட் ஆன் தெ ஃப்ளை” தேர்வு ரெகார்ட்மைடெஸ்க்டாப் பதிவு நடக்கும் போதே குறியாக்கத்தையும் செய்ய வைக்கிறது. |
06:19 | முன்னிருப்பாக இது செயலிழந்து இருக்கும். சிறிய இடத்தை பிடிக்கும்போதோ அல்லது ஒரு வினாடிக்கு குறைவான ப்ரேம்களே தேவை என்றாலும் இதை பயன்படுத்தலாம். |
06:28 | அதிக இடத்தை துல்லியமாக பதிவு செய்ய வேண்டுமெனில் இதை பயன்படுத்த வேண்டாம். |
06:34 | முன் சொன்னபடி இந்த தேர்வை பயன்படுத்தும்போது ஆடியோ விடியோ இரண்டும் 100 சதவிகிதமாக அமைக்க வேண்டும். |
06:42 | “ஜீரோ கம்ப்ரெஷன்” டேப் கேஷ் ஐ சுருக்குவதை கட்டுப்படுத்துகிறது. “க்விக் சப்சாம்ப்லிங்” வண்ணத்தை மாற்றுவதின் தரத்தை பாதிக்கிறது. இவற்றை அப்படியே விட்டுவிடுவோம். |
06:55 | ““புல் ஷாட்ஸ் அட் எவெரி ப்ரேம்” முழு திரையை பதிவு செய்கிறது. முன்னிருப்பாக இது செயலில் இருக்காது. |
07:02 | மூன்றாம் டேப் ஒலி. சேனல்ஸ் தேர்வு உருவாகும் ஆடியோ ஓடையில் எத்தனை சானல்கள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கிறது.. |
07:10 | அது 1(மோனோ) அல்லது 2 (ஸ்டீரியோ) ஆக இருக்கலாம். ஒரே ஒரு மைக்கிலிருந்து பதிவு செய்யும் போது ஒரு சானலுக்கு மேல் தேவையில்லை. வெளியீட்டு கோப்பின் அளவுதான் அதிகமாகும். |
07:24 | “ப்ரீக்வென்சி” அமைப்பு ஒரு பதிவின் ஆடியோ தரத்தை அதிகமாக பாதிக்கும் விஷயமாகும். |
07:30 | முன்னிருப்பு 22,050. இது பேச்சை பதிவு செய்யும் போது தாராளமாக போதும். ஆனால் இசையை பதிவு செய்வதானால் இதை 44,100 என அதிகரிக்க வேண்டி இருக்கலாம். |
07:40 | “டிவைஸ்” என்பது "ப்லக்ஹெச்டபிள்யூ:0.0” என அமைக்கவும். இது சானல், ப்ரீக்வென்சி அமைப்புகளை துல்லியமாக கையாள உதவும். |
07:54 | அப்போதுதான் ஆடியோ தடை, குதிப்பது போன்ற பிரச்சினை இல்லாமல் சீராக இயங்கும். கீழ் எழுத்துக்களில் "டிபால்ட்" என்று அமைப்பதும் சரியே. |
08:05 | பதிவு செய்ய வெளி ஜாக் ஐ பயன்படுத்தினால் இந்த பெட்டியை செக் செய்யுங்கள். |
08:11 | சானல்கள், ப்ரீக்வென்சி மற்றும் டிவைஸ் புலங்கள் செயலிழக்கும். இந்த அமைப்புகள் ஜாக் சர்வரால் அமைக்கப்படும். |
08:19 | ஜாக் ஆல் பதிவு செய்யும் முன் ஜாக் சர்வர் வேலை செய்கிறதா என்று சோதித்துக்கொள்ளுங்கள். |
08:25 | கடைசி டேப் மிசிலெனஸ். இங்கு பலதரப்பட்ட தேர்வுகள் உள்ளன. அவை அதிகம் பயன்படா. |
08:34 | இதில் முக்கியமானது பாலோ மௌஸ் தேர்வு. இதை தேர்ந்தெடுத்தால் எங்கெல்லாம் கர்சர் போகிறதோ அங்கெல்லாம் பதிவு இடமும் நகரும். |
08:43 | இந்த தேர்வு இல்லையானால் கர்சர் எங்கு போனாலும் பதிவு இடம் நகராமல் ஒரே இடமாக இருக்கும். இதை கொஞ்ச நேரத்தில் செய்து காட்டுகிறேன். |
08:53 | அவுட்லைன் கேப்சர் ஏரியா ஆன் ஸ்க்ரீன் என்பதையும் தேர்வு செய்கிறேன். |
08:58 | இப்போது இந்த சாளரத்தை மூடிவிடலாம். இப்படி மூடிய உடனே அத்தனை அமைப்புகளும் சேமிக்கப்படும் என்று நினைவில் கொள்க. |
09:06 | காட்சி பலகத்தின் முன்காட்சி சாளரத்தில் நம் மாதிரி பதிவின் பதிவு இடத்தை வரையலாம்.. |
09:14 | சொடுக்கியின் இடது பட்டனால் சொடுக்கி தேவையான இடம் வரை இழுங்கள். பின் பட்டனை விட்டுவிடலாம் |
09:20 | இப்போது முன் காட்சி சாளரத்தில் சிறிய செவ்வகமும் திரையில் ஒரு பெரிய செவ்வகமும் இருக்கும். இதுவே உண்மையில் பதிவு செய்யப்படும் இடம். |
09:30 | இந்த இடத்தில் நடப்பவை எல்லாம் பதிவாகும். இப்போது மாதிரி பதிவு செய்து பார்க்கலாம். . |
09:39 | நான் ரெகார்ட் ஐகானை சொடுக்குகிறேன். Hello and welcome to the demo recording using recordMyDesktop. |
09:48 | This is a demo recording to demonstrate how easy it is to create a spoken tutorial. |
09:54 | Click on Applications – Choose office - wordprocessor. டெமோ என்று டைப் செய்து சதுர ஐகான் மீது சொடுக்கி பதிவை நிறுத்துவோம். |
10:16 | இப்போது ரெகார்ட்மைடெஸ்க்டாப் என்கோடிங் செய்து ஓஜிவி பார்மாட்டில் ஒரு நகர்படத்தை தயாரிக்கிறது. |
10:24 | let me close the open office writer. என்கோடிங் முடிந்துவிட்டது. நகர்படம் தயராகிவிட்டது. இதை சோதித்துப்பார்க்கலாம். |
10:31 | ஹோம் அடைவில் இந்த அவுட்புட் ஓஜிவி கோப்பு இருக்கும். இதுவே இதன் முன்னிருப்பு பெயர். பதிவான படத்தை இயக்கிப்பார்க்கலாம். வலது சொடுக்கி விஎல்சி ப்லேயரால் இயக்கலாம். |
11:14 | இந்த டுடோரியலில் கொடுத்த தகவல்கள் உங்களுக்கு உங்கள் கணினியில் ரெகார்ட்மைடெஸ்க்டாப் ஐ பயன்படுத்த உதவும் என்று நினைக்கிறேன். |
11:21 | இந்த இலவச திறந்த மூல மென்பொருளை நிறுவி ஆடியோ விடியோ டுடோரியல் கோப்புகளை உருவாக்கிப்பாருங்கள். ஆன்லைன் காட்சியால் கற்பிக்கும் மாட்யூல்களை நீங்களே உருவாக்கிப்பாருங்கள். |
11:30 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் மும்பை ஐஐடியில் உருவாக்கிய ஸ்போகன் டுடோரியல்டாட் ஆர்க் ஒருங்கிணைக்கும் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:42 | இதற்கு நிதி உதவி இந்திய அரசு எம்ஹெச்ஆர்டி மூலம் துவக்கிய தேசிய கல்வித்திட்டதின் ஐசிடி மூலம் கிடைக்கிறது. |
11:51 | மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
12:01 | இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது. மூல பாடம் மும்பை ஐஐடி யில் ஷகினா செய்க், நான்சி அவர்கள் உருவாக்கியது. மொழியாக்கம் கடலூரில் இருந்து திவா. டப் செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது ....... |